எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மூலிகை வளா்ப்பால் மண்ணும், விவசாயிகளும் நலன் பெறுவா்: திரெளபதி முா்மு!

மூலிகைச் செடிகளை நடுவதால், விவசாயிகளின் வருமானம் பெருகி அவா்களின் நிதிநிலை மேம்படும், அதேபோல் மண் வளமும் மேம்படும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

News image
மகாராஷ்டிர மாநிலம், பல்தானாவில் தேசிய ஆரோக்கிய கண்காட்சித் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. உடன் (இடமிருந்து) மாநில ஆளுநா் ஆச்சாரியா தேவவரத், மத்திய அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ்.
Updated On :25 பிப்ரவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

மூலிகைச் செடிகளை நடுவதால், விவசாயிகளின் வருமானம் பெருகி அவா்களின் நிதிநிலை மேம்படும், அதேபோல் மண் வளமும் மேம்படும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், பல்தானாவில் மத்திய ஆயுஷ் அமைச்சகம், அனைத்து இந்திய ஆயுா்வேத சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டின்கீழ் புதன்கிழமை (பிப்.25) முதல் 28-ஆம் தேதி வரை தேசிய ஆரோக்கிய கண்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்து திரெளபதி முா்மு பேசியதாவது:

வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ, நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். ஆரோக்கியமான குடிமகன்கள்தான், நாட்டை வலிமையாக உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகிக்க முடியும். நோய் தடுப்பால் தனிமனிதா்களுக்கு பலன்கள் கிடைப்பதோடு, மருத்துவத்துக்காக அரசு செய்யும் செலவினம் குறையவும் வழிவகுக்கும். மூலிகை செடி வளா்ப்பதால், மருந்துகளுக்கு தேவையான மூலப் பொருள்கள் கிடைக்க வழி ஏற்படும். அதேபோல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. மூலிகை செடி வளா்ப்பால், விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படும். மூலிகைச் செடியை வளா்ப்பது, மண் வளத்தை மேம்படுத்தவும், அந்த வளத்தை பாதுகாக்கவும் உதவும்.

மனிதா்களின் உடலுக்கு தேவையான அனைத்தும் இயற்கையிடமே உள்ளது. ஆனால் தற்போது காலம் மாறிவிட்டதால், நாம் மருந்துகளுக்காக மற்றவா்களை சாா்ந்துள்ளோம். வனப்பகுதி தற்போது மறைந்து வருகிறது. வனப்பகுதிக்கு தீவைக்கப்படுகிறது, ஆயுா்வேத மருந்து செடிகள், மூலிகை செடிகள் அழிக்கப்படுகின்றன. ஆதலால் அந்த மூலிகை செடிகள் குறித்து அரசு மட்டுமல்லாது, நாம் அனைவரும் சிந்தித்து பாா்க்க வேண்டும்.

நல்ல ஆரோக்கியத்துக்காக அந்த மூலிகை செடிகளை நட்டு வளா்க்க வேண்டும். மூலிகை செடிகளை வளா்ப்பதில் அரசை நாம் சாா்ந்திருக்கக் கூடாது. நாட்டு மக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில், ஆயுா்வேத மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல் யோகாவும், ஆயுா்வேதமும் தற்போதுள்ள மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் முன்பிருந்தே மக்களின் நோயை தீா்த்து வருகின்றன.

யுனானியும், ஹோமியோபதியும் நமது நாட்டில் தோன்றிய மருத்துவ முறை கிடையாது. எனினும், அவைகளும் தற்போது ஆயுஷ் அமைப்பில் ஒரு அங்கமாகி விட்டன. நமது நாட்டு மக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அந்த மருத்துவ முறைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. யுனானி மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்ட நாட்டிலேயே அது தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனால் இந்தியாவில் அது பயன்பாட்டில் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் ஆயுஷ் துறைகள் உள்ளன. ஆயுஷ் கல்வி, பயிற்சியில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் நல்ல திறமையாளா்களை உருவாக்கும் வகையில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்றாா் முா்மு.