மகா கும்பமேளா வர்த்தகம் ரூ. 3 லட்சம் கோடி!

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா வர்த்தகம் தொடர்பாக...
மகா கும்பமேளா வர்த்தகம்  ரூ. 3 லட்சம் கோடி!
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால் அப்பகுதியில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடி வர்த்தகத் தொகையைக் கடந்துவிட்டதால், தற்போது எதிர்பார்ப்பு ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாக மகா கும்பமேளா மாறியிருப்பதாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு பொதுச் செயலாலரும், சாந்தினி செளக் தொகுதி எம்பியுமான பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக 6 வாரங்களாக நடைபெற்று வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா கடந்த 37 நாள்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், “மகா கும்பமேளா நிகழ்வுக்கு 40 கோடிகள் பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் அவர்கள் மூலம் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விடவும் புனித நீராடுவதற்கு 60 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று தெரிகிறது, இதன் மூலம் வர்த்தகமானது ரூ. 3 லட்சம் கோடியை எட்டும்.

கும்பமேளாவால் வணிகத்துறை பொருளாதார உயர்வைச் சந்தித்துள்ளன. அவை தங்குமிடம், உணவு, போக்குவரத்து, ஆன்மிக உடை, பூஜைப் பொருள்கள், கைவினைப்பொருள்கள், ஜவுளி, தொலைத்தொடர்பு, கேமரா போன்றவையும் அடங்கும்.

இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தகுந்த ஊக்கத்தை அளித்துள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மகா கும்பமேளாவால் ஏற்பட்ட பொருளாதார நன்மையானது பிரயாக்ராஜ்ஜுக்கு மட்டுமல்ல. பிரயாக்ராஜ்ஜை சுற்றியுள்ள 150 கி.மீ. வரை உள்ள நகரங்கள் வணிக எழுச்சியைக் கண்டு உள்ளூர் பொருளாதாரமும் உயர்ந்துள்ளன.

கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் அயோத்தி, வாரணாசி செல்வதால் அப்பகுதிகளிலும் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்காக உள்கட்டமைப்பு, மேம்பாலங்கள், சாலைகள், சுரங்கப்பாதைகளை மேப்படுத்த உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கிய ரூ. 7500 கோடியில், மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கு ஒதுக்கிய ரூ. 1,500 கோடியும் அடங்கும்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com