

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக தனது தொகுதியான ரேபரேலிக்குச் செல்லவிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, தனது சொந்தத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலிக்கு செல்லவிருக்கிறார்.
ராகுல் காந்தியின் ரேபரேலி பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கே.எல். சர்மா கூறுகையில்,
'இது இரண்டு நாள் பயணமாக இருக்கும். லக்னெள விமான நிலையத்திற்கு வரும் ராகுல் காந்தி முதலில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.
அதன்பின்னர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.
அவர் கும்பமேளாவில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை' என்று கூறினார்.
ராகுல் காந்தி பிப். 21, 22 ஆகிய நாள்களில் ரேபரேலி செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக்கொண்டார்.
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த நிலையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.