ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

தில்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிஷி(கோப்புப்படம்)

Published On :23 பிப்ரவரி 2025, 4:13 pm IST

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிஷியின் நியமனம் இறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் அவர், தில்லி சட்டப்பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

அதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "என்னை நம்பிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கும், கட்சிக்கும் நன்றி. வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்னையை எழுப்புவோம்.

பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி நிறைவேற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.