8 மாதங்களில் இல்லாத அளவு சரிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 243 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 24) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.

சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 243 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.

அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3% வரை சரிந்தன. நிஃப்டி பட்டியலில் ஆட்டோ, நுகர்வோர் பொருள்கள் துறை மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவு சரிவாகும்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 856.66 புள்ளிகள் சரிந்து 74,454.41 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.14 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.07 சதவீதம் சரிவாகும்.

இன்றைய வணிகத்தின் ஆரம்பத்தில் 74,893.45 புள்ளிகளாகத் தொடங்கிய சென்செக்ஸ், 74,387 வரை சென்றது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். நாளின் பிற்பாதியில் சற்று உயர்ந்து 74,907 என்ற இன்றைய நாளின் உச்சத்தையும் எட்டியது. வணிக நேர முடிவில் 856 புள்ளிகள் வரை சரிந்து 74,454 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 6 நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 24 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக எம்&எம் நிறுவனப் பங்குகள் 1.50% வரை உயர்ந்தன. இதற்கு அடுத்தபடியாக கோட்டாக் வங்கி 0.67%, ஐடிசி 0.25%, நெஸ்ட்லே இந்தியா 0.25%, மாருதி சுசூகி 0.18%, ஆக்சிஸ் வங்கி 0.11% உயர்வுடன் இருந்தன.

இதேபோன்று ஹெச்.சி.எல். டெக் -3.34%, சொமாட்டோ -3.33%, டிசிஎஸ் -2.92%, இன்ஃபோசிஸ் -2.81%, பார்தி ஏர்டெல் -2.32%, டாடா ஸ்டீல் -2.21%, டெக் மஹிந்திரா -2.18%, என்டிபிசி -1.89% சரிவுடன் காணப்பட்டன.

நிஃப்டியை பொறுத்தவரை 22,609 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக22,668.05 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இதையும் படிக்க | பங்குச் சந்தையில் அக்., 2024 முதல் ஒரு லட்சம் கோடி டாலர் நஷ்டம்! லாபத்தில் சீனா!

எனினும் பிற்பாதியில் படிப்படியாக சரிந்து 22,518.80 என்ற அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் 243 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் எம்&எம், டாக்டர் ரெட்டி, எய்ச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், கோட்டாக் வங்கி, டிரெண்ட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com