
மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெற்கு மும்பையின் கோட்டைப் பகுதியில் ஸ்பானிஸ் ஃபேஷன் பிராண்ட் நிறுவனமான ஸாரா கடந்த 8 ஆண்டுகளாக இயங்கிவந்த நிலையில், தங்களது பிரபல கடையான சோபோவை(SoBo) மூடியுள்ளது.
துணிகளுக்கு பிரபலமான ஸாரா இந்தக் கடைக்கு மாத வாடகையாக ரூ.3 கோடி செலுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்தக் கடையின் வெளியில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?
ஸாரா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அந்தக் கடையை மாத வாடகையாக ரூ.2.25 கோடி வீதம் 21 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது. முதல் 5 மாதங்களுக்கு வாடகை இலவசம் என்றும் முதல் மூன்று ஆண்டுகள் முடிந்ததும் வாடகை 5 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய வாடகையை மாதத்திற்கு ரூ.3 கோடி (3,01,52,152) முதல் ஆண்டுக்கு ரூ.36 கோடி (36,18,25,823) வரை எனக் கணக்கு காட்டப்படுகின்றன. இவ்வாறான அதிகப்படியான வாடகை காரணமாகவே இந்தக் கடை மூடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதுகுறித்து ஸாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 23 ஆம் தேதியில் இருந்து எங்கள் நிறுவனம் தெற்கு மும்பையில் மட்டும் செயல்படாது என்றும், ஆனால், மும்பையில் உள்ள மற்ற இடங்களில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தது முடிவு!
கடையின் சிறப்புகள் என்ன?
47,565 சதுரடி கொண்ட இந்தக் கடை 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஸாரா நிறுவனத்துக்கு குத்தகை விடப்பட்டது. இதற்கான மாத வாடகை ரூ.2.25 கோடி, வைப்புத்தொகை ரூ.13.5 கோடி, தினசரி வாடகை வீதம் ஒருநாளைக்கு ரூ.8.21 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
118 ஆண்டுகள் பழமையான இஸ்மாயில் கட்டடத்தை பராமரிப்பு செய்ய உள்ளூர் பொறியாளர்களுடன் இணைந்து ஸாரா நிறுவனம் பணியாற்றியது. இதற்கு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இது மட்டுமின்றி மும்பை மற்றும் தானேவிலும் ஸாராவிற்கு கடைகள் உள்ளன.
பீனிக்ஸ் பல்லேடியம் (லோயர் பரேல்), விவியானா மால் (தானே), பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி (குர்லா) ஆகியவைகளாகும். பர்பிள் ஸ்டைல் லேப் 60,000 சதுரடியில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்துள்ளது. இதற்கு 5 வருட வாடகை சுமார் ரூ. 36 கோடியாகும். இது ஒருநாளைக்கு ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான இஸ்மாயில் கட்டடத்தில் ஹௌஸ் பாப்-அப் என்னும் கடை அமைக்கப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினர் 15 ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் வாடகைக்கு இருக்கப் போவதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் இந்த வாடகை பல மடங்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.