ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவு?தனியார் விமானத்தில் பறக்கும் முதல்வர்! அரசு செலவு அல்ல, தனிநபர் செலவிடுவதாக விளக்கம்!புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம்! 28-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்!செல்போனுக்கு மாற்றா? மெட்டா நிறுவனர் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட கையடக்க மியூஸ் சார்ம்! எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி!

ரஷியா செல்லும் பிரதமர் மோடி?

இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Published On :

ரஷியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா, ரஷியாவின் மாஸ்கோ நகரில் சிகப்பு சதுக்கத்தில் மே மாதம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ராணுவ வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரஷிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறவிருப்பதால், பிரதமர் செல்வதற்கு ஒருமாத காலம் முன்னதாகவே ராணுவ வீரர்கள் சென்று, அணிவகுப்புக்கு ஒத்திகை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவில் 16 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பு விடுத்ததன்பேரில், பிரதமர் மோடி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷியா சென்றிருந்தார். அதன்பிறகு, ரஷியாவுக்கு தற்போது செல்ல வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

1941 ஆம் ஆண்டு, ஜூன் 22 ஆம் தேதி சோவியத் யூனியன் மீது (தற்போதைய ரஷியா) ஜெர்மனி தாக்குதல் நடத்தியது. 1945, மே மாதம் 8 ஆம் தேதிவரை நீடித்த இப்போரில், சோவியத் யூனியனிடம் ஜெர்மனி படைகள் சரணடைந்தன. இந்த போர் வெற்றியைத்தான், ரஷியா ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 9-ல் கொண்டாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.