மகளிர் இட ஒதுக்கீடுச் சட்டத்திருத்தம் காலத்தின் கட்டாயம்: பிரதமர் நரேந்திர மோடி
தற்போதைய சூழலில் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்திருத்தம் மிகவும் அவசியம் என்று மோடி கூறியிருப்பது...

பிரதமர் நரேந்திர மோடி - டிஎன்எஸ்
புதுதில்லி: மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தம் தற்போதைய காலத்தின் தேவை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை தேசத்தின் நலன்களே முதன்மையானவை என்றும் கூறினார்.
மகளிருக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது எனவும் இந்த முயற்சியில் தானும் பல ஆண்டுகளாகப் பங்கேற்று வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மகளிர் மேம்பாட்டில் என்டிஏ அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் மகளிர் மேம்பாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டில் பாஜக-என்டிஏ கூட்டணியும் உறுதியாக இருப்பதாக கூறினார்.
மகளிருக்கு அதிகாரமளித்தல் என்ற உறுதிப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின் நலனே முதன்மையானது என்ற மோடி, நாட்டின் நலனை விட சில கட்சிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அதன் பாதிப்பை மகளிரும் நாடும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்திருத்தம் மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய மோடி, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ளவர்களின் கனவுகளை நனவாக்கவும், நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் காணொலிப் பதிவை வெளியிட்டு அதில் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Prime Minister Modi has said that the BJP and NDA remain unwavering in their commitment to empowering women across the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

