கேரளத்தில் தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பெரும்பாவூர் அருகே பொன்சாசேரியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவர் வசித்து வருகிறார். இவரது 5 வயது மகன் அல் அமீன்.
இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகில் 5 வயது சிறுவன் மீது தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சொண்டு செல்லப்பட்டான். இருப்பினும் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.