
ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஞாயிற்றுகிழமை ஆஜரானார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அவரின் 8 வயது மகன் படுகாயம் அடைந்தார். இச்சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒருநாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
மேலும் வழக்கு தீர்க்கப்படும் வரை இந்த நிபந்தனைகள் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.