10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை செல்ல இருப்பதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் அநுரகுமர திஸநாயக்கவுடன் பிரதமர் மோடி
இலங்கை அதிபர் அநுரகுமர திஸநாயக்கவுடன் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை செல்ல இருப்பதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தேதிகள் இன்னும் இருதரப்பில் இருந்தும் முடிவாகவில்லை.

இதுபற்றி இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கான தேதி குறித்து ஆய்வு செய்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

நடப்பாண்டு ஜிடிபி வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சரியும்!

கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் அநுரகுமர திஸநாயக்க, பிரதமர் மோடிக்கு இலங்கை வர அழைப்பு விடுத்திருந்தார். திஸநாயக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக இலங்கைக்குச் சென்றிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, தான் முதல் முறையாக, பிரதமராக பதவியேற்ற பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இலங்கை செல்லவிருக்கிறார்.

அநுரகுமர திஸநாயக்க விரைவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனால், தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கேஜரிவால் வேண்டுகோள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com