நெல்லியம்பதி பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

நெல்லியம்பதி படகிரி தோட்ட குடியிருப்புப் பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் மலைக் கிராமத்தினர் அச்சமடைந்தனர்.
நெல்லியம்பதி படகிரி தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற காட்சி
நெல்லியம்பதி படகிரி தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற காட்சி
Published on
Updated on
1 min read

நெல்லியம்பதி படகிரி தோட்ட குடியிருப்புப் பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் மலைக் கிராமத்தினர் அச்சமடைந்தனர்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி படகிரி தோட்ட பகுதியில் பெரும்பான்மையோர் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மலைப்பகுதிக்கு வைக்குச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லியம்பதி படகிரி தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற காட்சியை அந்த பகுதி மக்கள் செல்போனில் படம் எடுத்து உள்ளனர். இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் நடமாடும் அந்த புலியை வனத் துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து வனப் பகுதிக்குள்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை புலி கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நெல்லியம்பதி படகிரி தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற காட்சியை செல்போனில் படம் எடுத்த அந்த பகுதி மக்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com