திருப்பதி விபத்துக்கு யார் பொறுப்பு? பவன் கல்யாண் பதில்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.


திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்துக்கு அரசு முழு பொறுப்பேற்பதாக துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சர்வதரிசன டிக்கெட் வழங்குவதில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறமையற்ற நிர்வாகமே விபத்துக்கு காரணம் என பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், பவன் கல்யாண் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோருகிறேன். திருப்பதி விபத்துக்கு தேவஸ்தான தலைவர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோரே பொறுப்பேற்க வேண்டும். திருப்பதி நெரிசலுக்கு அரசே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும்.
மீண்டும் இதுபோல் நடக்காமல் இருக்க அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும். கோயில்களில் விஐபிக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது; இதேபோன்று சாதாரண பக்தர்களையும் கவனிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை (ஜன. 10) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சர்வதரிசன டிக்கெட் வாங்கக் குவிந்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் நேற்று (ஜன. 8) உயிரிழந்தனர்.
மேலும், பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...