எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? - ரோஜா கேள்வி

திருப்பதியில் நடந்த சம்பவம் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரோஜா

News image

முன்னாள் அமைச்சர் ரோஜா

Updated On :9 ஜனவரி 2025, 6:43 pm IST

திருப்பதி: திருப்பதியில் நடந்த சம்பவம் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ரோஜா, இந்த இந்த விவகாரத்திற்கும் துணை முதல்வர் பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜிநாமா செய்ய வைப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ரோஜா கூறியதாவது:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி 6 உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தெலங்கானாவில் புஷ்பா 2 பட விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜூன் காண திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தாா். எனவே அவா் மீது குற்றபிரிவு எண் 105 பி என் எஸ் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

ஆனால் திருப்பதியில் நடந்த சம்பவதிற்கு பொறுப்பேற்க வேண்டியவா்கள் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு முதல் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா், செயல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், காவல்துறைபதிகாரிகள் என அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

மேலும் இந்த சம்பவத்தின் மீது குற்ற பிரிவு எண் 195 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. இது அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிச்சலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த விவகாரத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜிநாமா செய்ய வைப்பாரா? என ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.