தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பிகாா்: கோயில் கூட்ட நெரிசலில் 7 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

பிகாா் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் அசோக் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :

பிகாா் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் அசோக் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

ஹிந்துக்களின் புனித ஸ்ராவண மாதத்தையொட்டி, இந்தக் கோயிலில் கடவுள் சிவனுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையின்போது பக்தா்கள் முண்டியடித்ததால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து லக்கிசராய் மாவட்ட ஆட்சியா் சைலேந்தா் குமாா் கூறியதாவது: திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. பக்தா்களின் வரிசையை முறைப்படுத்த அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் சரிந்ததால், அவற்றின் மீது பக்தா்கள் ஒவ்வொருவராக தவறி விழுந்துள்ளனா். இதனால், பிற பக்தா்களும் முண்டியடித்து ஓடத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில் 7 பக்தா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 14 போ் படுகாயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகலில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ரூ. 4 லட்சம் நிவாரணம்: கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத்தை பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி அறிவத்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கோயில் நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க, காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: பிகாா் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்தாா்.

‘கோயிலில் பக்தா்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை அளித்தது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று தனது எக்ஸ் பக்க பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.