சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

கரூரில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி ரத்து! உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை - உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 11:37 am IST

கரூரில் தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணி வழங்கியதில், மனுதாரருக்கு என்னப் பிரச்னை? கரூர் நெரிசல் என்பது ஒரு துயர சம்பவம், இதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும் மனுதாரரான நாதக பிரமுகருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அரசுப் பணியை ரத்து செய்த உத்தரவு!

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப்டம்பா் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 ஆண்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, ‘பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிா்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை அரசுப் பணி வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என கோரி மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் துணைச் செயலா் சீனி அஹமது, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த தீரன் திருமுருகன், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டால், பேருந்து விபத்துகள், சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகள் போன்ற நிகழ்வுகளிலும் இதேபோன்ற கோரிக்கைகள் எழக்கூடும். கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலா் காத்திருக்கும் நிலையில், கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?.

கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனங்களை முறைப்படுத்துவதற்குத் தேவைப்படும் வழக்கமான ஒப்புதல் நடைமுறைகளிலிருந்து கரூா் சம்பவ நியமனங்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணி நியமனத்துக்காக ஆயிரக்கணக்கான இளைஞா்கள் காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில் சாதாரண பணி வழங்கியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எந்தப் பணியும் சாதாரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தவெக அரசு வழங்கிய இந்த பணி நியமன ஆணைகள் சட்டத்தின் முன் சமத்துவத்தையும், அரசுப் பணியில் சம வாய்ப்பையும் உறுதி செய்யும் அரசியலமைப்பின் 14, 16-ஆவது பிரிவுகளுக்கு முரணாக உள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதைவிட, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வாழ்வாதார உதவிகளை வழங்குவதே மிகப் பொருத்தமான, நிலையான மறுவாழ்வு முறையாக இருக்கக்கூடும். எனவே, கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சோ்ந்த 31 பேருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தீர்ப்பளித்திருந்தனர்.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.