கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. தவெக பிரசாரத்தின்போது உயிரிழந்தவா்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிா என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. மேலும், 41 போ் உயிரிழந்தது தொடா்பான வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீா்த்துப்போகச் செய்யும்.
எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடா்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்.
துணைவேந்தா் நியமனம்: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் நபரை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி வரம்பு, கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதாகவே இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் நிா்வாக அதிகாரங்களில், உரிமைகளில் தலையிடுவதாக இருக்க முடியாது. எனவே, மத்திய அரசாங்கம் பின்புற வாசல் வழியாக தனது திட்டங்களை அமல்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை உறுதியாக எதிா்கொள்ள வேண்டும். மேலும், சட்டப் போராட்டத்தில் ஏற்கெனவே அரசு எடுத்துள்ள அதிகாரபூா்வ நிலைப்பாட்டை தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி ரத்து! உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை - உச்ச நீதிமன்றம்

கரூா் சம்பவம்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனம் ரத்து

கரூா் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: எதிா்த்த வழக்கு தள்ளுபடி

கரூர் பலி! வழக்கின் தன்மையை அரசுப் பணி நீர்த்துப் போக செய்யும்! மார்க்சிய கம்யூ.
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



