'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?

'எமர்ஜென்சி' திரைப்படத்தைப் பார்க்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் அழைப்பு.
'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
Published on
Updated on
1 min read

தான் நடித்துள்ள 'எமர்ஜென்சி' திரைப்படத்தைப் பார்க்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டுவந்த எமர்ஜென்சியை மையமாக வைத்து, கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள 'எமர்ஜென்சி' படம் ஜன.17ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், தனது படத்தைப் பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு நடிகை கங்கனா அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது, பிரியங்கா காந்தியின் அணுகுமுறையை புகழ்ந்துள்ள கங்கனா, ராகுல் காந்தியின் நடத்தையை விமரிசித்துள்ளார்.

பிடிஐ நிறுவனத்துக்கு இதுகுறித்து பேட்டியளித்த கங்கனா,

'நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்து படத்தைப் பார்க்க அழைப்பு விடுத்தபோது சிரித்துக்கொண்டே 'பார்க்கலாம்' என்று கூறினார். என்னுடைய வேலையைப் பாராட்டினார். என்னுடைய ஹேர் கலர் நன்றாக இருந்தது என்றார். அது அழகான உரையாடலாக இருந்தது. பிரியங்கா அவரது சகோதரரைப் போலல்லாமல் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார். அவரது பேச்சை நான் ரசித்தேன்' என்று கூறினார்.

அதேநேரத்தில் ராகுல் காந்தியின் நடத்தை குறித்து விமரிசித்தார். அவரை திரைப்படம் பார்க்க அழைத்தபோது மரியாதைக் குறைவாக தன்னைப்பார்த்து சிரித்ததாகவும் அவருடைய நடத்தையில் மரியாதை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரும் ராகுல், பிரியங்காவின் பாட்டியுமான இந்திரா காந்தி 1975 - 1977 வரை அமல்படுத்திய அவசர நிலை மற்றும் அதன் பின்விளைவுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியாகும் நேரத்தில் அரசியலில் சலசலப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com