கோப்புப் படம்
கோப்புப் படம்

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. வீட்டின் குளத்தில் வருமான வரி சோதனை! காத்திருந்த அதிர்ச்சி!

வரி ஏய்ப்பு செய்ததுடன், வீட்டின் குளத்தில் 3 முதலைகள் இருப்பது வருமான வரித் துறை சோதனையில் தெரிய வந்தது.
Published on

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வான ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் கேஷர்வானி இருவர் மீதும் வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில், இருவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், ரூ. 155 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்தது. 3 கோடி ரொக்கமும், கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹர்வன்ஷுடன் இணைந்து பீடி வர்த்தகம் நடத்திய ராஜேஷ் மட்டும் ரூ. 140 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும், இது தொடர்பான ஆவணங்கள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ராஜேஷ் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்யப்படாத கார்களும் இருப்பது தெரிய வந்தது. பினாமி பெயரில் கார்கள் வாங்கியிருக்கக் கூடும் என்ற கோணத்தில் போக்குவரத்துத் துறையிடம் கார்கள் தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் கோரியுள்ளனர். இந்தக் கார்கள் எங்கிருந்து வந்தது என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர, ஹர்வன்ஷ் வீட்டின் குளத்தில் 3 முதலைகள் இருப்பதைக் கண்டு, வருமான வரித்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ஹர்வன்ஷ் வீட்டில் முதலைகள் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com