மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அவதூறு வழக்கில் ராகுலுக்கு புணே நீதிமன்றம் ஜாமீன்

சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

News image
ராகுல் காந்தி(கோப்புப்படம்)
Updated On :10 ஜனவரி 2025, 1:53 pm

DIN

சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு புணே சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி காணொளி மூலம் ஆஜரானார். அப்போது அவருக்கு ரூ.25,000 உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதுகுறித்து ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது என்று கூறினார்.

அதேசமயம் இந்த வழக்கு பிப்ரவரி 18 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த 2023ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புணே நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

பின்னர் இந்த வழக்கு எம்.பி., மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.