![மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்](http://media.assettype.com/dinamani%2F2025-01-04%2F8w5dtcut%2FANI_20250104141449.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்யப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பழங்குடியினர் நலத் திட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கான மாநிலக் குழுவின் தலைவர் விவேக் பண்டிட் கூறுகையில்,
ஒருங்கிணைப்பு அமைப்பு இல்லாததால் பழங்குடியினர் குழுக்கள் பல திட்டங்களை இழக்கின்றன இந்தத் திட்டங்கள் திறமையாகச் செயல்படுத்தப்படுவதையும், பழங்குடியின மக்களைச் சென்றடைவதையும் உறுதிசெய்யப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பழங்குடியினர் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான 24 அம்ச செயல் திட்டத்தை விவரிக்கும் அரசுத் தீர்மானத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள பழங்குடியினர் கட்காரி மற்றும் பிற குழுக்கள் இந்தத் திட்டங்களின் முழுப் பலனையும் பெற வேண்டும் என அவர் கூறினார்.