100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி!

பள்ளியின் கடைசி நாளைக் கொண்டாடிய மாணவிகளால் பள்ளியின் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகக் கூறி நடவடிக்கை
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட்டில் பள்ளி விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பள்ளி மாணவிகளை சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பள்ளியில் பள்ளியின் கடைசி நாளைக் கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர். இந்த நிலையில், பள்ளி நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தங்கள் பள்ளி மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர். பள்ளி சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 11) புகார் அளித்தனர்.

புகாரில் அவர்கள் தெரிவித்ததாவது, ஆண் ஆசிரியர்களுக்கு மத்தியில் மாணவிகள் சட்டையைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாணவிகள் மீதான இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, மாணவிகளின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை’’ என்று கூறியுள்ளனர். புகாரை விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் மாதவி மிஸ்ரா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X