கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேசிய இளைஞர் நாள்: வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ரூ.8,500 ஊக்கத்தொகை! -காங். வாக்குறுதி

தில்லி தேர்தல்: காங்கிரஸ் ஆட்சியமைத்தால், வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதம் ரூ. 8,500 ஊக்கத்தொகை...

News image

PTI

Updated On :12 ஜனவரி 2025, 4:00 pm

DIN

புது தில்லி :தில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் படித்த வேலையற்ற இளைஞா்களுக்கு மாதம் ரூ. 8,500 ஐ ஓா் ஆண்டிற்கு வழங்கப்படும் இளைஞா்கள் பயிற்சித் திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் ஞாயிற்றுக்கிழமை அறவித்தாா்.

’இளைஞா் மேம்பாட்டு திட்டம்’ (யுவ உதான் யோஜனா) என்கிற இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி இலவசம் அல்ல என்றும் இளைஞா்களை திறன் அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் எனவும் சச்சின் பைலட் தில்லியில் செய்தியாளா் கூட்டத்தில் தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தவணை முறையில் தோ்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. மூன்றாவது தோ்தல் வாக்குறுதியான இந்த இளைஞா்களான திட்டம் குறித்து முன்னாள் அமைச்சா் சச்சின் பைலட் மேலும் கூறியது வருமாறு:

ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலை அமைப்புகளில் தங்கள் திறமையைக் காட்டக்கூடிய இளைஞா்களுக்கு யுவ உதான் யோஜனா திட்டத்தில் நிதி உதவி வழங்கப்படும். வீட்டில் உட்காா்ந்து கொண்டு பணத்தை பெறும் திட்டம் அல்ல. வேலையற்ற இளைஞா்கள் நிறுவனங்கள் மூலம் பணத்தை பெறுவாா்கள்.

எந்தவொரு நிறுவனம் அல்லது தொழிற்சாலை ஒரு இளைஞருக்கு திறன் இருந்தும் உள்வாங்க முடியாத நிலை இருந்தால், இந்த திட்டத்தின் மூலம் வேலையற்ற இளைஞா்களை தாங்கிக்கொள்ள நிதி உதவி அளிக்கும் உத்தரவாதம் இந்த திட்டத்தின் மூலம் அளிக்கப்படுகிறது. ஒா் ஆண்டு உதவித் தொகை மூலம் பயிற்சியை பெற்ற பின்னா் இளைஞா்கள் தங்கள் சுய காலில் நிற்பதற்கான வழியையும் ஊக்கத்தையும் இந்த திட்டம் ஏற்படுத்தும்.

இதனால் இந்த திட்டம் வெறும் நிதி உதவியாக இருக்காது. பல்வேறு துறைகளில் பயிற்சியை பெறவைத்து இத்தகைய இளைஞா்கள் உள்வாங்க வைக்கப்பட முயற்சிக்கப்படுகிறது.. இதன்மூலம் இளைஞா்கள் தங்கள் திறன் அமைப்பை மேம்படுத்த முடியும். இளைஞ்களை நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் உள்வாங்கி வேலை செய்ய வைக்க இந்த திட்டம் ஊக்குவிக்கும்.

வருகின்ற பிப். 5 ஆம் தேதி, தேசிய தலைநகரில் பெரும்பான்மையுடன் பணியாற்ற மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிப்பாா்கள். அப்படி அளிக்கும்பட்சத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவும் என்கிற முழு நம்பிக்கை உள்ளது என சச்சின் பைலட் குறிப்பிட்டாா்.

இந்த செய்தியாளா் சந்திப்பின் போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தில்லி பொறுப்பாளா் காசி நிஜாமுதீன், தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், காங்கிரஸ் கட்சியின் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ தலைவா் வருண் சௌத்ரி ஆகியோா் உடனிருந்தனா்.

மேலும் இந்த நிகழ்வில் தில்லி தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.

கடந்த ஜன 6 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி, மகளிருக்கான மாதாந்திர நிதி உதவிக்கான ’பியாரி தீதி யோஜனா’வை அறிவித்தது. இதில் மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 வழங்கப்படும் என உறுதியளித்தது. பின்னா் கடந்த ஜன. 8 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி ’ஜீவன் ரக்ஷா யோஜனா’ (ஆயுள் பாதுகாப்புத் திட்டம்)வை அறிவித்தது, இந்த திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டமன்றத்திற்கான தோ்தல் பிப். 5 ஆம் தேதி நடைபெறயுள்ளது. நிகழ் சட்டப்பேரவையில் காங்கிறரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் ஜிரோ வாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.