மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி தேர்தல்: வாக்காளர்களிடம் நன்கொடை பெறும் ஆம் ஆத்மியின் பிரசாரம் தொடக்கம்

தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களிடம் நன்கொடை கேட்கும் நிலையில் தில்லி முதல்வர்!

News image

PTI

Updated On :12 ஜனவரி 2025, 10:00 am

புது தில்லி : தில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார்.

தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதிஷி பேசியிருப்பதாவது, “இத்தேர்தலில் போட்டியிட எனக்கு ரூ. 40 லட்சம் வரை தேவை. இதற்காக தில்லி மக்களிடமும் நாட்டு மக்களிடமும் ஆதரவு கோருகிறேன். உங்கள் ஆதரவுடன் தேர்தலில் கல்காஜி பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்று பேசியுள்ள அவர், மக்களிடம் தேர்தல் நன்கொடை அளித்து உதவுமாறு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “கடந்த 5 ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ.வாக, ஓர் அமைச்சராக, இப்போது, தில்லி முதல்வராக நான் இருப்பதற்கு.. நீங்கள் எனக்கு ஆதரவு தந்தீர்கள். உங்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இல்லாமல் இவையனைத்தும் சாத்தியமாகியிருக்காது.

கல்வியறிவு பெற்ற ஒரு இளம் பெண்ணாக நான் அரசியலில் தடம்பதிக்க, நீங்கள் அளித்த நம்பிக்கையும் நன்கொடையும் உதவியது. நீங்கள் இல்லாமல் நான் தனியொரு ஆளாக இந்த பாதையில் செல்ல முடியாது.

இப்போது, இன்னொரு தேர்தல் பிரசாரத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் உங்களின் பேராதரவு மீண்டும் தேவைப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தில் உங்களின் பங்களிப்பாக நன்கொடை அளித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் (அதற்கான இணையதள முகவரியையும் அவர் பகிர்ந்துள்ளார்).

நாம் ஒன்றிணைந்து முன்னேற்றத்துக்கான இந்த பாதையில் நம்பிகையுடன் தொடருவோம்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.