புணேவில் பேருந்து மீது மினி வேன் மோதல்: 9 பேர் பலி

புணேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
விபத்துக்குள்ளான வாகனம்.
விபத்துக்குள்ளான வாகனம்.
Published on
Updated on
1 min read

புணேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.

மகாராஷ்டிர மாநிலம், புணே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மினி வேன் வெள்ளிக்கிழமை காலை மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள்.

மினிவேன் நாராயண்கோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் வந்த டெம்போ அதன் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவர் அதிகரிப்பதாக அமைச்சர் பெருமிதம்!

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் மினிவேனில் இருந்த 9 பேரும் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com