மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நள்ளிரவில் தில்லி எய்ம்ஸில் காத்திருந்த நோயாளிகளை சந்தித்த ராகுல்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது பற்றி..

News image

எய்ம்ஸ் மருத்துவமனையில் ராகுல்

Updated On :17 ஜனவரி 2025, 9:58 am

DIN

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று நள்ளிரவில் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

ராகுல் காந்தி சமீப காலமாக காய்கறி விற்பனையாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருவதோடு அதற்கான விடியோவையும் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தலைநகர் தில்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்றிரவு திடீரென சென்றிருந்தார். அங்குள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

சுரங்கப்பதையில் தங்கியிருந்தவர்களை சந்தித்த ராகுல்

சுரங்கப்பதையில் தங்கியிருந்தவர்களை சந்தித்த ராகுல்

இதுதொடர்பாக ராகுல்காந்தியின் எக்ஸ் பதிவில்,

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.

அதீத குளிர், பசி, சுரங்கப்பாதைகளில் படுத்து உறங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் இன்றைய தில்லி எய்ம்ஸின் உண்மை நிலை.

இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார்.

மத்திய மற்றும் தில்லி அரசுகள் இவர்கள் மீது பாராமுகமாக இருப்பது பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.