
தில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தொடர்களை பாஜக தலைவர் ரமேஷ் பிதூரியின் மருமகன் மிரட்டுவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து மிரட்டல் விடுப்பது குறித்து கல்காஜி தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு அதிஷி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''தில்லியின் கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ரமேஷ் பிதூரி என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் அவதூறான கருத்துகளை தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. நான் கொடுத்த புகாரின்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தலில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தவறான நடத்தைக்கு தண்டனை கிடையாது என்பதற்காக உதாரணமாக இச்சம்பவம் மாறியுள்ளது. இதனால்தான் பாஜக தலைவர்களிடமிருந்தும் தொண்டர்களிடமிருந்தும் வன்முறையும் மிரட்டலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கின்றனர். இது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆம் ஆத்மியின் தொண்டர்களான சஞ்சய் குப்தா உள்ளிட்ட 7 பேருக்கு பாஜக தொண்டர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாஜக தலைவர் ரமேஷ் பிதூரியின் மருமகன் பேரில் இது நடக்கிறது.
தொண்டர்களிடமே இவ்வாறு என்றால், இந்தப் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடம் அவர்கள் எத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
இதுபோன்ற வன்முறைகள் கல்காஜி தொகுதியில் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான வாக்குப்பதிவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இது தொடர்பாக குறிப்பிட்ட பாஜக தொண்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மற்ற கட்சித் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு கல்காஜி தொகுதி முழுக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்'' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அதிஷி.
இதையும் படிக்க | ஆம் ஆத்மி தலைவர்கள் நால்வர் பாஜகவில் இணைந்தனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.