அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் தயார்: பிரியங்கா காந்தி

அரசியலமைப்பைக் காக்க வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் காந்தி தயாராக உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி PTI
Published on
Updated on
1 min read

அரசியலமைப்பைக் காக்க தனது வாழ்க்கையை தியாகம் செய்யவும் ராகுல் காந்தி தயாராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

1924 ஆம் ஆண்டு 39வது காங்கிரஸ் மாநாட்டிற்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கியதன் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் 'காந்தி பாரத்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அக்கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது,

''அரசியலமைப்பை மாற்றுவதற்கான பாஜகவின் முயற்சிகளுக்கு எதிராக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிவருவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையைப் பேசுவதிலிருந்து ராகுல் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்று கோழைகள் அல்ல. உண்மைக்கான இயக்கத்தைக் கொண்டுள்ளோம்.

அரசியலமைப்பைக் காக்க தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல் ஏற்கனவே கூறியுள்ளார். இதேபோன்று கட்சித் தொண்டர்களும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து பல்வேறு அரசாங்கம் மாறியுள்ளது. ஆனால் எந்தக் கட்சியின் அமைச்சரும் அமித் ஷாவைப் போன்று டாக்டர் அம்பேத்கரை அவமதித்தது இல்லை. அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ஆம் ஆத்மி தொண்டர்களை மிரட்டுகிறது பாஜக: அதிஷி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com