டிரம்ப்பின் கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு அதிகம் பலனளிக்காது - ரகுராம் ராஜன்

கூடுதல் வரி விதிப்பு, உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிரானது என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனல்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள கூடுதல் வரி விதிப்பு, உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிரானது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு கூடுதல் வரிவிதிக்கும் டிரம்ப்பின் இந்த முடிவு அந்நாட்டு நிர்வாகம் நம்புவதைப்போன்று அமெரிக்காவுக்கு பலனளிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 47வது அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், பதவியேற்றதும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அமெரிக்கா்களின் நலனுக்காக, வெளிநாடுகளுக்கு மேலும் கூடுதலாக வரி விதிப்போம்; இறக்குமதி வரிகளை அதிகரிப்போம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார்.

இதில், டிம்ரப்பின் கூடுதல் வரிவிதிப்பு குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளதாவது,

’’டிரம்ப் நிர்வாகத்தின் கூடுதல் வரிவிதிப்பானது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைக்கான ஆதாரமாக மாறும் என நினைக்கிறேன். அமெரிக்காவைப் பொறுத்தவரை இதில், அவர்கள் பலனடைவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் பொருள்கள் அமெரிக்காவுக்கு வெளியே உற்பத்தி செய்யப்படுகின்றன.

உலகளாவிய வரி விதிப்பு அமலுக்குக் கொண்டுவரப்பட்டால், மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வது தடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இது அமெரிக்காவில் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். அதுவும் அதிக கட்டணத்தில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும்.

உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக சீனா போன்ற பெரிய நாடு, வியட்நாம் போன்ற சிறிய நாட்டிடமிருந்து உற்பத்திக்கான பொருள்களைப் பெறுகின்றன. இது பெரிய அளவில் உற்பத்தி செலவைக் குறைக்கும்.

வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும்

’’ஒரே இரவில் கூடுதல் வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டால், எங்கே முதலீடு செய்வது என்ற நிச்சயமற்றத் தன்மை ஏற்படும். இது உலகளவில் வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும். கூடுதல் வரிவிதிப்பானது, கூடுதல் வருவாய்க்கான ஆதாரமாகவும் கூடுதல் வேலைவாய்ப்புக்கான ஆதாரமாகவும் மாறும் என அதிபர் டிரம்ப் நினைத்துக்கொண்டிருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிறப்பால் குடியுரிமை ரத்து முடிவுக்கு எதிராக 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com