அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பெரும் பொருள் செலவில் ஜீத் அதானி திருமணம் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு
கௌதம் அதானி (கோப்புப் படம்)
கௌதம் அதானி (கோப்புப் படம்)X | Gautam Adani
Published on
Updated on
1 min read

ஜீத் அதானியின் திருமணம் பெரும் பொருள் செலவில் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்தாண்டு ஜூலை மாதம் விமரிசையாக நடைபெற்றது. உலகளவில் பேசுபொருளாக இருந்த ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், சுமார் ரூ. 5,000 கோடி பொருள் செலவில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா திருமணமும் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியைப்போல பெரும் பொருள் செலவில் விமரிசையாக நடைபெறும் என்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தனது மகனின் திருமணம் சாதாரண மக்களின் வீட்டில் நடைபெறுவதைப்போலவும், குஜராத்தில் அகமதாபாத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதியில் பாரம்பரிய முறையில் நடைபெறவிருப்பதாகவும் கௌதம் அதானி தெரிவித்துள்ள்ளார்.

ஜீத் அதானியின் திருமணம் குறித்து கௌதம் அதானி தெரிவிப்பதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. ஜீத் அதானி திருமணத்தில் பிரபல பாடகர்கள் டெய்லர் ஸ்விஃப்ட், டிராவிஸ் ஸ்காட், ஹனி சிங் உள்பட பிரபல அமெரிக்க நட்சத்திரங்களான கைலி ஜென்னர், கெண்டல் ஜென்னர், செலினா கோம்ஸ், சிட்னி ஸ்வீனி உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

மேலும், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் போக்குவரத்துக்காக 1,000-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும், சமையல் பணிக்கு 58 நாடுகளைச் சேர்ந்த பிரபல சமையல் வல்லுநர்களும் வரவிருப்பதாக வதந்திகள் பரவின.

அதுமட்டுமின்றி, 20,000 முதல் 50,000 கலைஞர்கள் சேர்ந்து, அல்லிப் பூக்களாலான ரங்கோலியை உருவாக்கி சாதனை படைக்கவிருப்பதாகவும், திருமண நாள் இரவில் பெரியளவிலான ட்ரோன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com