பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரளத்தில் எரிந்த காரில் இருந்து சடலம் மீட்பு

கேரளத்தில் எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News image
எரிந்த கார்.
Updated On :25 ஜனவரி 2025, 1:04 pm

DIN

கேரளத்தில் எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழாவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் கார் ஒன்று சனிக்கிழமை எரிந்துகொண்டிருந்தது.

தோட்டத்துக்குள் கார் எரிந்து கொண்டிருந்ததை அறிந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

பின்னர் காரில் இருந்து எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். அவர் அருகில் வசிக்கும் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக காரில் வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

காரில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இறப்புக்கான சரியான காரணம் விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.