நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், எரிந்த நிலையில், காருக்குள் 4 உடல்கள் மீட்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
திசையன்விளை அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு கார் எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
அதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர், அந்தக் காரில் எரிந்த நிலையில் நான்கு உடல்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். உடல்கள் அனைத்தும் தீயில் முற்றிலும் எரிந்துவிட்டிருந்ததால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.
தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்துள்ளனர். உடல்களை உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்து, அவர்களது அடையாளம் மற்றும் முகவரியை விசாரித்து வருகிறார்கள்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? இது கொலையா? தற்கொலை? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
About 4 bodies recovered from a burnt-out car near Vetiyaanvilai, Nellai district..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

நெல்லை அருகே காரில் ஒரே குடும்பத்தில் 4 போ் மரணத்தில் திடீர் திருப்பம்!

திசையன்விளை அருகே காருக்குள் 4 போ் சடலங்கள்! சென்னையைச் சேர்ந்தவர்கள்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு



