யமுனையில் விஷம் கலந்த விவகாரம்: ஆதாரம் அளிக்க கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

யமுனையில் விஷம் கலந்தது தொடர்பான உண்மை ஆதாரத்தை அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

யமுனையில் விஷம் கலந்தது தொடர்பான ஆதாரத்தை அளிக்குமாறு அரவிந்த் கேஜரிவாலிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைநகரான தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிப்.5-ல் நடைபெறும் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றனர்.

இந்த நிலையில் பாஜக தலைமையிலான ஹரியாணா அரசு தில்லிக்கு யமுனை நீரில் விஷம் கலந்ததாக கூறியதற்கு உண்மையான ஆதாரம் அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதில், கேஜரிவாலுக்கு அனுப்பிய நோட்டீசில், புதன்கிழமை இரவு 8 மணிக்குள் அவரது கோரிக்கைக்கு உண்மை ஆதாரத்தை அளிக்குமாறு தேர்தல் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தொடர்புடைய சட்ட விதிகளின் படி இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்படுகிறது. எனவே, புகார்களுக்கான உங்கள் பதிலை வருகிற ஜனவரி 29 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் உரிய ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும். இது விஷயத்தை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜரிவாலின் வித்தியாசமான அரசியலில் மதுபான ஊழல்! -ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஹரியாணாவில் உள்ள பாஜக அரசு, நாட்டின் தலைநகரான தில்லிக்கு வழங்கும் யமுனை நதியில் விஷம் கலந்ததாக கேஜரிவால் திங்கள்கிழமை குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இதுபற்றி அவர் கூறும்போது, “தில்லி நீர் வளத்துறை தண்ணீர் தில்லிக்குள் வருவதைத் தடுக்கவில்லை என்றால், அது ஒரு பெரிய இனப்படுகொலையைத் தூண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று கேஜரிவால் மீது அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளன. இதனால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “ஹரியாணா அரசு யமுனையில் விஷம் கலந்ததாக அரவிந்த் கேஜரிவால் பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளார். வெற்றியும் தோல்வியும் தேர்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். அப்பாவி முகத்தை காட்டி, ஹரியாணா அரசை யமுனையில் விஷம் கலப்பதாக குற்றம் சாட்டி, தில்லி மக்களை பயமுறுத்த முயற்சித்தீர்கள். அரசியலை இதைவிட அழுக்காக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com