
சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு 2025 நிறைவடைந்தது.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெற்ற இந்த அரங்கில், நாடு தழுவிய அளவிலான அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றுப் பேசினர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெ. ராமசுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி திங்கள்கிழமை (ஜன. 27) கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
மக்களவை உறுப்பினா் சசி தரூா், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவா் ஜகதீஷ் குமாா், சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வைத்யசுப்பிரமணியம், நடிகா் காா்த்தி, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் சஞ்சீவ் சன்யால், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான், இந்தூா் ஐஐடி இயக்குநா் ஹிமான்ஷு ராய், தெலங்கானா துணை முதல்வா் பட்டி விக்ரமா்கா உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.