திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்வர்!

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
Published on
Updated on
1 min read

திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததையடுத்து, புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன.13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று (ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 10 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருவார்கள் என எதிர்பார்த்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்!

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், 30 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பிரயாக்ராஜுக்கு வந்த பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள்.

நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளைச் செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். மேலும் எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: 15 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com