வீட்டுப் பணியாளர்களுக்கு 7 வாக்குறுதிகள்.. ஆம் ஆத்மி வெளியீடு!

ஆம் ஆத்மி வெளியிட்ட வாக்குறுதிகள் பற்றி..
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்
Published on
Updated on
1 min read

தில்லி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசு இல்லங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு எழு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

தலைநகரில் பிப்ரவரி 5ல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தில்லியை ஆட்சி செய்யப்போவது யார் என்ற போட்டி அரசியல் கட்சிகளுக்கு இடையே நிலவி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகின்றன.

தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றினால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்று தொடர்ச்சியாகக் கட்சியினர் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர்.

அந்தவகையில், எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கு எழு வாக்குறுதிகளை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கேஜரிவால்,

வீட்டு உதவியாளர்களில் 70-80 சதவீதம் பேர் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்குக் குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சில எம்பிக்கள் தங்கள் வீட்டுப் பணியாளர்களைத் தங்கவைப்பதற்குப் பதிலாக இந்த குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக பணியாளர் பதிவு போர்ட்டலை உருவாக்கப்படும்.

இரண்டாவதாக, இவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

மூன்றாவதாக, அவர்களின் சுகாதாரப் பராமரிப்புக்காக நடமாடும் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும்.

நான்காவதாக, அவர்களின் சம்பளம் மற்றும் வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தச் சட்டங்கள் இயற்றப்படும்.

ஐந்தாவதாக பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

ஆறாவதாக அவர்களின் மகள்களின் திருமணங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

ஏழாவதாக அவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கும் என்று அவர் கூறினார்.

தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்படும். கடந்த பத்தாண்டுகளாகத் தில்லியை ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி கட்சி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் பாஜகவுடன் கடுமையான போரில் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.