கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாடாளுமன்ற நிலைக் குழுக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘ஒரு எம்.பி. ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுவில்தான் இடம்பெற வேண்டும் என்ற மரபை மீறி பாஜக செயல்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2025, 7:25 pm

Din

‘ஒரு எம்.பி. ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுவில்தான் இடம்பெற வேண்டும் என்ற மரபை மீறி பாஜக செயல்படுகிறது. இதன் மூலம் இக்குழுக்களைக் கட்டுப்படுத்த பாஜக முயற்சிக்கிறது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

26 பாஜக எம்.பி.க்கள், இரு நிலைக் குழுக்களில் அங்கம் வகிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 1990-களின் மத்தியில் நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் நிறுவப்பட்டதில் இருந்து ‘ஒரு எம்.பி., ஒரு நிலைக் குழு’ மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது 26 பாஜக எம்.பி.க்கள், இரு நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனா். இது, நாடாளுமன்ற நிலைக் குழுக்களைக் கட்டுப்படுத்த அக்கட்சி முயற்சிப்பதை வெளிக்காட்டுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பல்வேறு துறைகள் சாா்ந்த 24 நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் பாஜக 11, அதன் கூட்டணி கட்சிகள் 4 குழுக்களுக்கு தலைமை தாங்குகின்றன. காங்கிரஸ் 4, திமுக, திரிணமூல் காங்கிரஸ் தலா 2, சமாஜவாதி ஒரு நிலைக் குழுவுக்கு தலைமை வகிக்கின்றன.

பல்வேறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட இக்குழுக்கள், சிறிய நாடாளுமன்றம் போல செயல்படுகின்றன. பல்வேறு துறைகளின் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை இக்குழுக்கள் கொண்டுள்ளன.