
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
கடந்த ஓராண்டில் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள், நிறைவடைந்த திட்டங்கள் குறித்தும் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலான குடியரசுத் தலைவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, 2024 - 25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பொருளாதார வளர்ச்சியானது 6.3 சதவிகிதம் முதல் 6.8 சதவிகிதம் வரை இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று பிற்பகல் பொருளாதார அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.
8-ஆவது முறை
மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.