காஷ்மீரையும் குமரியையும் இணைக்கும் ரயில்வே: குடியரசுத் தலைவர்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை பற்றி...
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு PTI
Published on
Updated on
1 min read

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே மூலம் நாடு இணைக்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

அவரின் உரையில் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளின் வளர்ச்சி குறித்து பேசினார்.

“உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில்வே இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் நாடு இணைக்கப்படவுள்ளது.

தற்போது 1,000 கி.மீ. மெட்ரோ பாதைகளை இந்தியா அமைத்து சாதனை படைத்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நமது நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. விமான நிறுவனங்கள் 1,700 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து குடிமக்களின் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் சுகாதார மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com