ஹிமாசலை புரட்டிப்போட்ட பருவமழை: 51 ஆக உயர்ந்த பலி!

ஹிமாசலில் கனமழையால் உயிரிழப்பும், காணாமல் போனோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
monsoon havoc
கனமழை
Published on
Updated on
1 min read

ஹிமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் இதுவரை 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வெள்ளம், தொடர் நிலச்சரிவுகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜூன் 20 முதல் ஜூலை 1 வரையிலான காலகட்டங்களில் 12 மாவட்டங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த சேத மதிப்பீட்டு குறித்து மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெள்ளம், நீரில் மூழ்கிப் பலி, நிலச்சரிவு, மின்னல் தாக்குதல், சாலை விபத்து உள்ளிட்ட பல காரணங்களாகல் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காணாமல் போயுள்ளனர். மண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் அதிகபட்சமாக 10 இறப்புகளும், 34 பேர் மாயமாகியுள்ளனர்.

மழைக்கால சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர். 204 வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 22 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 84 கடைகள், மாட்டுக் கொட்டகைகள், தொழிலாளர் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.88.03 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை, மின் துறை, நீர் வழங்கல் துறை உள்ளிட்ட பொது உள்கட்டமைப்பு சேதம் ரூ.283.39 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம், கல்வி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளிலும் இழப்புகள் பதிவாகியுள்ளன.

காங்க்ராவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (13), அதைத் தொடர்ந்து மண்டி, சம்பா மாவட்டத்தில் தலா 6, குலு (4), கின்னௌர், சிம்லா மற்றும் உனா மாவட்டங்களில் 2 முதல் 4 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் சிர்மௌர் மற்றும் சோலன் மாவட்டங்களில் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஜூலை 1 ஆம் தேதி மட்டும் பிலாஸ்பூர், மண்டியில் தலா ஒன்று, குலுவில் 3, சம்பாவில் 2 எனச் சாலை விபத்தில் 7 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதோடு கால்நடைகள், விவசாயம் மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்குப் பருவமழை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அரசு அனைத்து அவசரக்கால நெறிமுறைகளையும் செயல்படுத்தியுள்ளது. மேலும் 24x7 கட்டுப்பாட்டு அறையை இயக்கி வருகிறது. அவசரநிலைகளைப் புகாரளிக்க பொது உதவி எண் 1070 வெளியிடப்பட்டுள்ளது.

பருவமழை முன்னேறி வருவதால், பேரிடர் மேலாண்மை ஆணையம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து வருகின்றது.

SUMMARY

At least 51 people have lost their lives and 22 others are missing in Himachal Pradesh as torrential rains, flash floods, and landslides continue to wreak havoc across the state during the ongoing monsoon season, according to the latest official data.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com