ஓலா, ஊபர், ரேபிடோ பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

புதிய விதிமுறைகளால் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளைப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.
ஓலா, ஊபர், ரேபிடோ பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகளால், ஓலா, உபர், ரேபிடோ சேவைகளைப் பயன்படுத்துவோர், கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலை மற்றும் மாலையில், அதிகமானோர் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நேரத்தில், கட்டணத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வது, பயனாளிகளின் இடத்தை அடைய ஓட்டுநர் அதிக தொலைவு வர வேண்டியது இருந்தால், அதற்குக் கூடுதல் கட்டணத்தை பயனாளியே அளிக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன.

புதிய விதிமுறைகள், ஆட்டோ, பைக் டேக்ஸிகளுக்கும் பொருந்தும் என்றும், குறைந்தபட்ச கட்டண திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை மற்றும் மாலை நேரத்தில் தனியார் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் எந்த அளவில் கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தக் கட்டணத்தை 1.5 மடங்கு அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டு 2 மடங்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், சாதாரண நேரங்களில், இயல்பான கட்டணத்தை விட 50 சதவீதக் கட்டணத்தை மட்டும் குறைத்துக்கொள்ளலாம். இதனால், தேவை குறைவாக இருக்கும் நேரங்களிலும், ஓட்டுநர்கள் நல்ல வருவாயை ஈட்ட உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பயண சேவையை ரத்து செய்யும்போது, ஓட்டுநர் ரத்து செய்தாலும், பயணி ரத்து செய்தாலும் அபராதத் தொகை வசூலிக்கப்படும். அவ்வாறு போக்குவரத்துக்கான செயலியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயணத்தை ரத்து செய்தால் ஓட்டுநருக்கும், ஒரு பயணத்தை ஓட்டுநர் ஏற்றுக்கொண்டபிறகு பயணி ரத்து செய்தால் மொத்தக் கட்டணத்தில் 10 சதவீதம் அல்லது ரூ.100 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கிலோ மீட்டர் வரைக்கும் ஓட்டுநர் பயணித்து வந்து, பயனாளியை அடைந்தால் கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பயணித்து வந்தால் மட்டும் சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Due to the new regulations brought by the central government, users of Ola, Uber, and Rapido services are facing a hike in fares.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com