500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கைது!
புணேவில், மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் 22 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை. பெண் மீது எந்த ரசாயன ஸ்பிரேவும் அடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில், அந்தப் பகுதியில் செல்போன் சிக்னலை வைத்து, 27 வயது ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில், குற்றவாளி செல்ஃபி எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த புகைப்படமும் பெண் நினைவோடு இருந்தபோதுதான் எடுக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
சம்பவத்தன்று, அப்பெண், தனது ஆண் நண்பரை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். தான் மனக்கவலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்படி, கைது செய்யப்பட்ட ஆண் நண்பரும் வந்திருக்கிறார். பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சிசிடிவி இருக்கும் என்பதால் மின்தூக்கி வழியாகச் செல்ல வேண்டாம், படிகட்டு வழியாக வெளியேறுமாறு அப்பெண் அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படியே அந்த நபரும் செய்திருக்கிறார்.
ஆனால், அதற்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திடீரென அடையாளம் தெரியாத நபர் மீது, அப்பெண் பாலியல் புகாரை சாட்டியிருக்கிறார். விசாரணை முடிவடையாததால், காவல்துறையினர் இது குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
இன்னும், அப்பெண்ணின் மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை. எனவே, பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்தான் அந்த ஆண் நண்பர், பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்தான் அவரை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கும் அப்பெண்ணை நன்கு தெரிந்திருக்கிறது.
சம்பவம் நடந்த நேரத்தில், அந்த குடியிருப்புக்கு அருகே பதிவாகியிருந்த 500 செல்போன் எண்களையும் ஆய்வு செய்தபிறகே, இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு, வெள்ளிக்கிழமை இரவு அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அப்பெண்தான் தன்னை அழைத்ததாகவும், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவரே தன்னடய செல்ஃபோனில் செல்ஃபி எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
In a sudden twist in the case of a 22-year-old woman working as a software engineer in Pune, the victim's friend has been arrested.
இதையும் படிக்க.. கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் செல்லாதா? பரவும் வதந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

