
சென்னை: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் குடும்ப அட்டைக்குரிய பொருள்களின் முழு எடையும் பெறும் வகையில், நியாய விலைக் கடை, எடை இயந்திரத்துடன் விற்பனை முனைய இயந்திரத்தினை இணைத்து பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை மூலம் ஆதாா் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
கைரேகை பதிவு செய்யாதவா்கள் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய பொருள்கள் பெற இயலாது. எனவே, ஜூன் 33-ஆம் தேதிக்குள் அந்தந்த நியாய விலைக் கடைகளை அணுகி விரல் ரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். வீட்டில் முதியவா்கள், நோயாளிகள் இருந்தால் விற்பனையாளருக்கு தகவல் அளித்து வீட்டில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக மாறிவிடும் என்று வரும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது
தமிழகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, கடைசி தேதி இன்னமும் வரையறுக்கப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி உண்மை இல்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.