ஹிமாசலில் கனமழைக்கு 69 பேர் பலி: தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

கனமழை காரணமாக ஹிமாசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு..
IMD issues Red Alert
Published on
Updated on
1 min read

ஹிமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஹிமாசலில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்துவருகின்றது. மேக வெடிப்புகளால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதற்கிடையில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் காங்க்ரா, சிர்மௌர் மற்றும் மண்டி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உனா, பிலாஸ்பூர், ஹமீர்பூர், சம்பா, சோலன், சிம்லா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, குடியிருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை எச்சரித்துள்ளது. ஜூலை 5 முதல் 9 வரை மாநிலத்தில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டியின் சிம்லா மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்தது, அதே நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அகார் மாவட்டத்தில் 7 செ.மீ, அதைத் தொடர்ந்து, சாராஹான் மற்றும் சிம்லாவில் தலா 4 செ.மீ, மழைப் பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மண்டி மாவட்டத்தின் செராஜ் மற்றும் தரம்பூர் பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அங்குப் பல மேக வெடிப்புகள் வீடுகள், வயல்கள், உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியுள்ளன. நடந்து வரும் பேரழிவில் குறைந்தது 110 பேர் காயமடைந்ததாக அவர் கூறினார்.

ஒரு குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கையாக, வீடுகள் அடித்துச்செல்லப்பட்ட, மோசமாக இடிந்துவிழந்த வீடுகள் உள்ளிட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து மாதத்திற்கு ரூ.5,000 வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

Summary

The India Meteorological Department has issued a red alert for very heavy rain in Himachal Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com