ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் பதுங்குமிடம் தகர்ப்பு! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் சோதனைகள் குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்று, பாதுகாப்புப் படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோடே வனப்பகுதியில், அம்மாநில காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (ஜூலை 5) ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பயங்கராவதிகளின் பதுங்குமிடம் ஒன்று இருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து தகர்த்துள்ளனர். இருப்பினும், இந்தச் சோதனையின்போது யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பதுங்கு குழியில் இருந்து 3 கையெறி குண்டுகள், ஏகே ரக துப்பாக்கியின் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ வனப்பகுதியில், பயங்கராவதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை 4-வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

A terrorist hideout has been busted by security forces in Poonch district of Jammu and Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com