இது டிரைலர்தான்! எங்களைச் சேர்த்தது மகாராஷ்டிர முதல்வர்! - ராஜ் தாக்கரே பேச்சு

ஹிந்திக்கு எதிரான வெற்றி பேரணியில் தாக்கரே சகோதரர்கள்...
Maharashtra Chief Minister brought us together, says Raj Thackeray
ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேx
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எங்களை மீண்டும் இணைத்துள்ளதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் இணைந்துள்ளனர்.

மகாராஷ்டிர அரசு, பள்ளிகளில் ஹிந்தி 3-ம் மொழி என்ற உத்தரவை வாபஸ் பெற்ற நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் வெற்றி பேரணியில் தாக்கரே சகோதரர்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இந்த நிகழ்வில் பேசிய ராஜ் தாக்கரே,

"பால் தாக்கரே செய்ய முடியாததை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்துள்ளார். எங்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளார். மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எங்களது வலுவான இணைப்பினால் பாஜக அரசு ஹிந்தி திணிப்பை வாபஸ் பெற்றுள்ளது.

ஹிந்தி வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி. ஹிந்தி பேசும் மாநிலங்களைவிட ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. அப்படியெனில் 3-வது மொழிக்கு என்ன தேவை இருக்கிறது? ஹிந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என்று கூறினார்.

உத்தவ் பேசுகையில், "நாங்கள் இருவரும் இனி ஒன்றாக இருக்கவே தற்போது சேர்ந்துள்ளோம். நாங்கள் இப்போது சேர்ந்துள்ளது டிரைலர்தான், ஆரம்பம்தான்.

இந்து, இந்துஸ்தானை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஹிந்தியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு இந்து மதத்தை நீங்கள்(பாஜக) கற்றுக்கொடுக்க வேண்டாம்" என்று பேசினார்.

Summary

Maharashtra Chief Minister brought us together, says Raj Thackeray in Raj Thackeray Uddhav Thackeray Rally, mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com