மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சகோசிங்கா பகுதியில் மொஹரம் பண்டிகைக்கான ஊரவலம் அமைதியான முறையில் நடைபெற்றது. தாகாவில் 400 ஆண்டுகள் பழமையான ஹுஸ்னி தலான் இமாம்பரா மசூதியில் இருந்து அஸிம்பூர், நில்கெட், புதிய மார்க்கெட் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தின்போது அதிக மின்திறன் உடைய கம்பிகள் மீது உரசியதில், காலை 11. 30 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மாவட்ட காவல் துணை ஆணையர் ராம்நிவாஸ் யாதவ், ''ஷியா பிரிவு முஸ்லிம்கள் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர். இதில், எதிர்பாராத விதமாக ஊர்வலம் எடுத்துச்சென்ற தாசியா என்ற அலங்கரிக்கப்பட்ட வாகனம் மின்கம்பிகள் மீது உரசியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

மொஹரம் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

Summary

One dead, three injured due to electrocution in Jharkhand's Giridih district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com