ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளப் பக்கம்
முடக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளப் பக்கம்
Published on
Updated on
1 min read

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கோரிக்கையின்படியே எக்ஸ் நிறுவனம் இதனைச் செய்துள்ளதாக தகவல்கள் பரவியதால், மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,

''ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் அரசு எதையும் கேட்கவில்லை. மாறாக, ராய்ட்டர்ஸ் இந்தியாவில் முடக்கப்பட்டது ஏன் என்றே கேட்டுள்ளது. மற்ற நாடுகள் கையாளும் ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் ராய்ட்டர்ஸ் வேண்டும் என்பதை அரசு விரும்புகிறது என்பதையே இவை காட்டுகின்றன. எக்ஸ் தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதேனும் குழப்பமாக இது இருக்கலாம்.

ராய்ட்டர்ஸை நிறுத்திவைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் அரசுக்கு இல்லை. இந்தப் பிரச்னையை சரிசெய்ய எக்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

Summary

Government of India did not ask the social media giant to block ruters handle and wants it to operate in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com