இந்தியாவில் மத சுதந்திரம் நலிவடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் சா்வேதச மதச் சுதந்திரம் தொடா்பான ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளதை நிராகரித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் சா்வேதச மதச் சுதந்திரம் தொடா்பான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச மதச் சுதந்திரம் மீதான அமெரிக்க ஆணையத்தின் (யூ.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்.) அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்ந்து நலிவடைந்து வருவதாகவும் இந்திய அரசு மதச் சிறுபான்மையினரைக் குறிவைப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்வினையாக வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து அதன் செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் இன்று(மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை குறித்து அரசு கவனத்திற்கொண்டுள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் தூண்டப்பட்ட மற்றும் ஒருதலைப்பட்சமான உருவகப்படுத்துதலை நாங்கள் நிராகரிக்கிறோம்.
பல ஆண்டுகளாக, இப்போது வரையிலும், உண்மை தரவுகளை விடுத்து ஆட்சேபனைக்குரிய வட்டாரங்களிலிருந்து பெறப்படும் தரவுகளையும் கொள்கை ரீதியான பிரசாரங்களையும் நம்பியும் இந்தியா மீது தேர்ந்தெடுக்கப்பட்ட உருவகப்படுத்துதல் முறையை யூ.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப். கடைபிடிக்கிறார்கள்.
இத்தகைய தவறான சுட்டிக்காட்டுதல்கள் மேற்கண்ட ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கச் செய்யும்.
இந்தியா மீதான பழிபோடுதல்களுக்குப் பதிலாக அமெரிக்காவில் ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரிப்பு போன்ற தீவிர பிரச்னைகளில் அமெரிக்கா கவனம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
International Religious Freedom USCIRF’s latest report external affairs ministry has responded
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்

யுபிஎஸ்சி: பிளாசிப் போர் முதல் இந்தியா சுதந்திரம் அடைவது வரை!

அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் இந்தியா: அமெரிக்க அரசு மூத்த அதிகாரி
அரசமைப்புச் சட்டம் மீதான நேரடி தாக்குதல் அவசரநிலை - பிரதமா் மோடி விமா்சனம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



