உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார்.

அரசுமுறைப் பயணமாக 5 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரேசில் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரியோ டி ஜெனீரோவில் 17வது பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார். முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசாவை சந்தித்துப் பேசினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 கூடுதல் உறுப்பு நாடுகளில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் முதல் அமர்வில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது,

''பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தத்திற்கான அமர்வில் உரையாற்றினேன். இதில், உலக வளர்ச்சிக்கு முன்பு இருந்ததை விட தெற்குலகின் குரல் ஏன் மிகவும் முக்கியமானது என்பது குறித்த எனது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டேன். தெற்குலகின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்காக உலகளாவிய நிறுவனங்கள் போதுமான பிரதிநிதித்துவத்தை ஏன் தருகின்றன என்பது குறித்தும் உரையாற்றினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ''அனைத்துமே செய்யறிவு (ஏஐ) ஆகிவிட்ட இக்காலகட்டத்தில், வாராவாரம் தொழில்நுட்பங்கள் மேம்பாடு அடைகின்றன. ஆனால், உலகளாவிய நிறுவனங்கள் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட மேம்பாடு அடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 20ஆம் நூற்றாண்டு தட்டச்சு இயந்திரத்தை 21ஆம் நூற்றாண்டு மென்பொருளைக்கொண்டு இயக்க முடியவில்லை.

பிரிக்ஸ் என்பது காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட ஒரு அமைப்பு என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இப்போது, ​​ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் போன்ற நிறுவனங்களில் சீர்திருத்தங்களுக்கு நாம் அதே உறுதியைக் காட்ட வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

Summary

PM Narendra modi Expressed views on why the voice of the Global South is more important BRICS Summit in Rio de Janeiro

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com